இவரே முதல்வர்! இவரே மாணவர்!

இவரே முதல்வர்! இவரே மாணவர்!
அன்பு நெஞ்சத்தீர்!
கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருக்கும் அரசு சாராயம் விற்கிறது.சாராயம் விற்ற ரவுடிகள் கல்லூரிகளை துவங்கி கல்வி தந்தைகளாக சமூகத்தில் பவனி வருகிறார்கள்.இந்த சூழலில் காசு இருப்பவனுக்கே கிடைக்கும் காஸ்ட்லியான மளிகை கடை சரக்காக மாறியிருக்கிறது இன்றைய கல்வி பள்ளிகல்வி என்றல் ஆயிரக்கணக்கில் கல்லூரிக்கல்வி என்றல் லட்சக்கணக்கில் என மூட்டை மூட்டையாக கல்லா கட்டிகொண்டிருக்கின்றனர் இன்றைய தனியார் சுயநிதி கல்லூரிகள்.இப்படி கல்லா கட்டிக்கொண்டிருக்கும் கல்லூரிகளில் நடக்கும் அநியாயங்களை அரசு கண்டுகொள்வதில்லை.

திருச்சி ஜமால் கல்லூரியில் என்ன பிரச்சனை?

கல்வி வியாபாரம் ஆகும் இந்நிலையில் புதிய அதிர்ச்சி தரக்கூடிய ஏமாற்று வேலைகளும் வெளியில் வரத்துவங்கியுள்ளன.திருச்சியில் ஏழை எளிய மக்கள் உயர்கல்வி பெறும் உன்னத நோக்கோடு துவங்கப்பட்ட அர்ப்பணிப்பும் பாரம்பரியமும் நிறைந்த கல்லூரியான ஜமால் முகமது கல்லூரியில் தற்போது முதல்வராக இருக்கும் டாக்டர் ஷேக்முஹமது புதிய முயற்சியாக அவர் முதல்வராக இருக்கும் இதே கல்லூரியில் தன்னை மாணவராக பதிவு செய்து தேர்வு எழுதி mphil பட்டம் பெற்றிருக்கிறார்.அவரே தேர்வுதுறையின் கண்காணிப்பாளராக இருக்கும்போது ஒழுங்காக தேர்வு எழுதிஇருப்பாரா என்பது சந்தேகமே.ஒரே நாளில் பல தேர்வுகளையும் எழுதியிருக்கிறார் என பேசப்படுகிறது.முறைகேடான வகையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்கு புறம்பாக மாணவராக பதிவு செய்தவர் நேர்மையாக படித்து தேர்வு எழுதியிருப்பார் என்பதை நம்ப முடியவில்லை.ஆகவே அவர் எழுதிய தேர்வு முறைகேடானதே. அவர் மாணவராக பதிவு செய்ததையும் தேர்வு எழுதியதையும் பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை மாறாக அவருக்கு பட்டமும் வழங்கியிருக்கிறது.அதனை கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் தனது கையால் வழங்கி கவுரவித்திருக்கிறார்.

நமக்கென்ன பிரச்சனை?

யாரோ யாரையோ ஏமாற்றி பட்டம் வாங்கினால் நமக்கு என்ன பிரச்சனை என நீங்கள் நினைக்கலாம்.இதனை நமது பிரச்சனையாகவும் சமூகப்பிரச்சனையகவும் பார்க்க வேண்டும்.இந்த சம்பவத்தை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் நாளை இதே கல்லூரி முதல்வரின் 5ம் வகுப்புகூட முடிக்காத உறவினர் அதிகாரத்தை தவறாகப்பயன்படுத்தி குறுக்குவழியில் இதே கல்லூரியில் பட்டம் முடித்து இதே கல்லூரியின் பேராசிரியராகக்கூட வந்து நமக்கு பாடம் எடுக்கலாம். ஏழை மாணவர்களுக்காக துவங்கப்பட்ட இந்த கல்லூரியிலேயே இப்படி நடந்தால் கொள்ளையடிப்பதற்காக துவங்கப்பட்ட கல்லூரிகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா. இது போல் எல்லா கல்லூரிகளின் முதல்வர்களும் தனக்குத்தானே முறைகேடாக பட்டம் பெற்றால் நம் நிலை என்னவாகும்? வீட்டில் வறுமையோடு படிக்க பணம் இல்லாமல் ஹோட்டல்களில் டேபிள் துடைத்துக்கொண்டும் பகுதி நேர வேலைகளுக்கு சென்றும் அரசு விடுதிகளில் அவதியோடு தங்கியும் கஷ்டப்பட்டு படித்து தேர்வெழுதி நாம் பெறும் பட்டதை அதிகாரத்தை தவறாகப்பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றி பெறலாம் எனில் நாம் எமாளிகளாகிறோம்.இப்படியே இது போனால் நமது உயர்கல்வியின் தரம் என்ன ஆகும்?

என்ன செய்யவேண்டும்?

ஜமால் கல்லூரி திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான கல்லூரி. இந்த கல்லூரியின் முதல்வர் செய்த ஒரு தவறுக்காக ஒட்டுமொத்த கல்லூரி நிர்வாகத்தின் பெயரும் இன்று கேளிக்குரியதாகியிருக்கிறது. எனவே கல்லூரி முதல்வரின் இந்த செயல் குறித்து உயர்கல்வித்துறை விசாரணை நடத்தவேண்டும். அவர் மோசடியாகப்பெற்ற mphil பட்டதை ரத்து செய்ய வேண்டும். மோசடி செய்த முதல்வர் மீது துறைரீதீயான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது நடந்தால்தான் கல்லூரியின் நற்பெயரும் மாணவர் நலனும் பாதுகாக்கப்படும். எனவே இந்த கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் எல்லோரும் இந்திய மாணவர் சங்கத்தோடு இணைந்திடுவீர்.

குறிப்பு-
இந்த செய்தியை அனைத்து ஜமால் கல்லூரி மாணவர்களுக்கும் அனுப்புவதன் மூலம் அநீதிக்கெதிரான எங்கள் முயற்சியில் நீங்களும் இணைந்திடுவீர்.

மாணவர் நலனில்…

இந்திய மாணவர் சங்கம்
திருச்சி மாவட்டக்குழு
தொடர்புக்கு – 9865026712

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: