Ponmagal Scandal: Anna University of Technology, Tiruchirappalli

Ponmagal Scandal: Anna University of Technology Tiruchirappalli is posted at
MSN News India 360
Facebook Group: Dynamic Dr J J (AIADMK SOCIAL NETWORK)
Dinamalar

திருச்சி: திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள், சென்னை அண்ணா பல்கலையோடு இணைக்கப்பட்டது என்று அரசு அறிவிக்கப்பட்ட நேரத்தில், திருச்சி அண்ணா பல்கலையில், பேராசிரியை ஒருவர் முனைவர் பட்டம் வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, சென்னை அண்ணா பல்கலையில் இருந்து பிரித்து, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் துவங்கப்பட்டன.துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் குறுக்கீடு, குறுநில மன்னர்கள் போல துணைவேந்தர்களின் செயல்பாட்டினால் பல்கலைகளில் மாணவர்களின் கல்வித்தரம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்தில், துணைவேந்தர்கள் லட்சக்கணக்கில், “பணப்பயன்’ அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தி.மு.க., ஆசி பெற்ற துணைவேந்தர்கள் என்பதால், கடந்த ஆட்சியில் கடுகளவு கூட நடவடிக்கை இல்லை.அதை கருத்தில் கொண்டு, புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி அண்ணா பல்கலைகளை கலைத்துள்ளது. பழையபடி சென்னை அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் என்று அறிவித்தது.கவர்னர் அறிவிக்கும் முன்னரே இந்த தகவல் வெளியில் கசிந்தது. அதன்பிறகு, துணைவேந்தர்கள் மற்றும் அவர்களது அடிப்பொடிகள், தங்களது, “காரியங்களை’ அவசர, அவசரமாக நிறைவேற்றிக் கொண்டனர்.திருச்சி அண்ணா பல்கலை பொறுத்தவரை, ஐ.டி., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் பொன்மகள், நேற்றுமுன்தினம் கவர்னர் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன், முனைவர் பட்டம் பெற்றார். புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் லோகநாதன் உள்ளிட்டோர் அடங்கிய கமிட்டி, இவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினர்.திருச்சி அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:துணைவேந்தருக்கு வலது, இடதுகரமாக செயல்படுபவர்களை எளிதாக முனைவர் பட்டம் கிடைக்கும் என்பதற்கு இச்சம்பவம் சிறந்த உதாரணம். நான்கு மாதத்துக்கு முன் சென்னை அண்ணா பல்கலையில், பொன்மகளின் முனைவர் பட்டம் தகுதியின்மையால் நிராகரிக்கப்பட்டது.”ஒரு பல்கலையில் நிராகரிக்கப்பட்டவருக்கு, மற்றொரு பல்கலையில் முனைவர் பட்டம் வழங்கப்படக்கூடாது’ என்பது கல்வி நிலைக்குழுவின் விதிமுறை.விதிமுறைகளை மீறி, துணைவேந்தரின் ஆசியோடு சட்டமீறல்களை செய்து மீண்டும் திருச்சி அண்ணா பல்கலையில் முனைவர் பட்டத்துக்கு பொன்மகள் விண்ணப்பித்துள்ளார்.”சிரமப்படாமல்’ முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இதேபோல, பண்ருட்டி உறுப்புக் கல்லூரியை சேர்ந்த, துணைவேந்தரின் பி.ஏ., வெங்கடேசன், கடந்த 9ம் தேதி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.வரும் 14ம் தேதி, பல்கலை தேர்வு நெறியாளரின் மனைவி வைஷ்ணவி, முனைவர் பட்டம் பெறவிருக்கிறார். இதுபோன்று தகுதியில்லாதவர்கள் எல்லாம் முனைவர் பட்டம் பெற்றால் மாணவர்கள் கல்வித்தரம் எப்படியிருக்கும்?எனவே, திருச்சி அண்ணா பல்கலையில் வழங்கப்பட்ட, வழங்கப்பட உள்ள முனைவர் பட்டங்கள் குறித்து தமிழக அரசு முழு அளவில் விசாரணை நடத்தி, உண்மையை வெளி கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து ஐ.டி., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் பொன்மகளிடம் கேட்டபோது, “”நான் பி.ஹெச்டி., முடித்ததை பற்றி நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது தகவல் வேண்டுமானால் என்னிடம் நேரில் வந்து கேளுங்கள்,” என்று கூறி மொபைல் ஃபோன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

அண்ணா பல்கலை மீது அடுக்கடுக்கான புகார்கள் : திருச்சி அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், கிளார்க் உட்பட ஆசிரியர் அல்லாத, 200 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்ட அவர்களை, பணி நிரந்தரம் செய்ய ஐந்து முதல் எட்டு லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், பணம் கொடுக்காத, 20 பேரை பணி நீக்கம் செய்தும், இதுகுறித்து பத்திரிக்கையில் செய்தி வெளியானதும் அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளப்பட்டதுமே புகாருக்கு அத்தாட்சியானது.

இஷ்டப்படி கவுரவ டாக்டர் பட்டம் தரலாமா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
சோனியா சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்ற டாக்டர் பட்டம்: டாக்டர் பட்டமும் தமிழக அரசியலும் தமிழக அரசியல்வாதிகளுக்கு பட்டங்கள் என்றாலே, ஒரு கிளுகிளுப்புதான், கிளர்ச்சிதான், மயக்கம்தான், கிரக்கம்தான்………மாற்றிமாற்றி கொடுத்துக் கொள்வதில் அவர்களுக்கு இணை அவர்கள் தாம். அதிலும் டாக்டர் பட்டம் என்றால் அவ்வளவு தான் உயிரைக்கூட விடுவார்கள். கருணாநிதி சோனியாவின் மீதான தனது விசுவாசத்தைத் தெரிவித்துக் கொள்ள, சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பாக டாக்டர் பட்டம் கொடுக்கச் செய்தார்[1]. சமீபத்தில் திரவிடியன் பல்கலைக்கழகத்தில் 8,029 பிச்.டிக்கள் மோசடி மூலம் பெற்றுள்ளதாக / கொடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால், ஆந்திர அரசு அவற்றைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளது[2].
கஷ்டப்பட்டு படித்து பெறும் டாக்டர் பட்டம்: ஒரு மாணவன் கஷ்டப்பட்டு, பட்டம் பெற்று, முதுநிலை பட்டம் பெற்று, எம்.ஃபில் செய்து பிறகு ஆராய்ச்சி செது பிஎச்.டி பட்டத்தைப் பெறுகிறான். இதில் கெயிட் படுத்தும் பாடுவேறு உள்ளது. பல நேரங்களில், அத்தகைய மாணவர்களை வீட்டுவேலை எல்லாம் செய்ய பணித்துள்ளார்கள்[3]. மாணவிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். கொடூரமான உச்சக்கட்டநிலை என்னவென்றால், ஒருதடவை படுக்கைக்கு வந்தால்தான், கையெழுத்துப் போடுவேன் என்று மிரட்டிய கெய்டுகளும் இருக்கிறார்கள். அவ்வாறு நொந்து, சுண்ணாம்பாகி பாடம் பெறுகின்ற நிலையில், இன்று கேவலம், யார்-யாரெல்லாம் எந்த கஷ்டமும் பெறாமல் டாக்டர் பட்டத்தைப் பெற்ருச் செல்வதில் எந்த கௌரமும் இல்லை. உண்மையில் அவ்வாறு பட்டங்களை அள்ளித்தருவதனால், கஷ்டப்பட்டு பெறுபவர்கள் நொந்து போவார்கள், மிகவும் மனது கஷ்டப்படுவார்கள்.
நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அள்ளித்தரும் டாக்டர் பட்டங்கள்: நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் புற்றீசல் போலக் கிளம்பிவிட்டப் பிறகு, டாக்டர் பட்டத்தின் கதி, கேவலமாகி விட்டது, சினிமா நடிகர், நடிகை என்று எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்[4]. அதிலும் டி.எஸ்.சி என்ற டாக்டர் பட்டம், மிகவும் கௌரவமான, அதிகம் படித்துள்ளவர்களுக்கு, தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, தகுதி, திறமை, அனுபவம் முதலியவற்றைப் பார்த்து, பரிந்துரை செய்யப்பட்டு கொடுக்கப்படும். ஆனால் சமீபத்தில், ஏதோ சம்பந்தமேயில்லாமல் அத்தகைய பட்டம் கொடுத்ததில், வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முதலமைச்சர், கவர்னர் முதலியவர்களின் தனி டாக்டர் என்ற தகுதியில் கொடுக்கப்பட்டப் பட்டங்கள்: விரும்புவோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் (டி.எஸ்சி.) வழங்குவதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது[5]. ஆளுநரின் தனி டாக்டர், முதல்வரின் தனி டாக்டர் என்ற ஒரே காரணத்திற்காக இலவசப் பொருட்களை வாரி வழங்குவது போல கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்குவதா என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது[6]. முதல்வரின் தனி டாக்டர் கோபால் மற்றும் ஆளுநரின் டாக்டர் உள்ளிட்ட 7 டாக்டர்களுக்கு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சமீபத்தில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
தனக்குத்தானே பரிந்துரை செய்து கொண்டது: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழக ஆளுநர் பர்னாலாவின் தனி மருத்துவரான சபா ரத்தினவேலுக்கு பட்டம் வழங்கக் கூடாது என பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் இந்த பட்டம் வழங்குவதை எதிர்த்து ஜி.வேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவரது: தாக்கல் செய்த, பொது நல மனுவில், “மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் ஆறு பேருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இதில் டாக்டர் சபாரத்தினவேல் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளார். கவுரவ டாக்டர் பட்டம் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட தகுதி எதுவும் இவருக்கு இல்லை. கவர்னர் மாளிகையுடன் இணைந்த மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளாக, டாக்டராக சபா ரத்தினவேல் உள்ளார். ஆட்சி மன்றக் குழுவில் உள்ள 11 பேரில், டாக்டர் சபா ரத்தினவேலுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆட்சேபனையில்லை என, ஐந்து பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். ஆட்சி மன்றக் குழுவில் டாக்டர் சபா ரத்தினவேலும் ஒருவர். தான் பட்டம் பெற ஆட்சேபனையில்லை என, அவரே கூறியுள்ளார்‘“, என கூறப்பட்டுள்ளது.
விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன: இதனிடையே அவருக்கு கடந்த சனிக்கிழமை (ஜனவரி 8) கெüரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கறிஞர் சங்கம் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய “பெஞ்ச்’ முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் கூறியது: ஆளுநரின் தனி மருத்துவரும், பட்டம் பெற்றவருமான சபா ரத்தினவேல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவில் உறுப்பினராக உள்ளார். சபாரத்னவேலின் பெயரை கடைசி நேரத்தில்தான் பட்டம் பெறுவோர் பட்டியலில் சேர்த்துள்ளனர். விருப்பப்பட்டவர்களுக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. பட்டம் வழங்கப்பட்டதில் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றார்.
பட்டமளிப்பு விழா முடிந்துவிட்ட நிலையில் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது: பல்கலைக்கழகத்தின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி. வில்சன் கூறியது: பட்டமளிப்பு விழா முடிந்துவிட்ட நிலையில் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. மேலும், பட்டம் வழங்குவதில் விதிமுறைகள் மீறப்படவில்லை என்றார். தகுதி இல்லாதர்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லாமல், அல்லது அவர்கள் எந்த தகுதியில் அவற்றைப் பெறத் தகுதியுடவர்கள் என்பதை விளக்காமல், முடிந்துவிட்டது, விட்டு விடுங்கள் என்ற ரீதிரில் வக்கீல் பேசியுள்ளது கேவலமாக உள்ளது.
நீதிபதிகள் கூறியது: “பட்டமளிப்பு விழா முடிந்துவிட்டது என்றாலும், டாக்டர் பட்டம் பெறுவதற்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். எனவே, மனுதாரர் தனது மனுவைத் திருத்தி அதில் கேட்க விரும்பும் நிவாரணத்தைக் குறிப்பிடலாம். கௌரவ டாக்டர் என்பது விருப்பப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதா என்பது பற்றி பல்கலைக்கழகமும் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு (ஜன.12) தள்ளி வைக்கப்படுகிறது’ என்று கூறினார்.
ஜனவரி 12, 2011: ஒன்றும் நடந்தாகத் தெரிவவில்லை. மேலும் அன்று சுவாமி விவேகாநந்தர் பிறந்த தினம். யாருக்கும் நினைவிருக்காது. ஆனால், தமிழ் புத்தகங்களை எரித்த பெஸ்கி(வீரமாமுனிவர்)யை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டு, அமைச்சர்கள் சென்று மால போடுவார்கள். அரசும் விளம்பரங்கள் வெளியிடும்[7]. ஆனால், இந்த உண்மையிலேயே வீரமான துறவியை ஏன் தமிழக அரசு கண்டு கொள்வதில்லை?

Ponmagal Scandal: Anna University of Technology Tiruchirappalli is posted at
MSN News India 360
Facebook Group: Dynamic Dr J J (AIADMK SOCIAL NETWORK)
Dinamalar

Advertisements

2 Responses to Ponmagal Scandal: Anna University of Technology, Tiruchirappalli

  1. ThanjaiTamila says:

    திருட்டுக் கூட்டம் எல்லாத்துறைகளிலும் வியாபித்து விட்டது! கல்வி ‘சேவை’ அல்ல, கேவலமான ஒரு வியாபாரம் என்பது இந்த 21 ம் நூற்றாண்டில் மக்களை பாதித்த மிகப்பெரிய ஏமாற்றங்களில் ஒன்று! ஆயிரம் சதுர அடி அப்பார்ட்மென்ட் இருந்தால், மற்றும் கையில் பணமோ, கட்சி தயவோ இருந்தால், அந்தச் சிறிய இடத்தில் நீங்கள் ஒரு பள்ளிக்கூடம் – இல்லை, ஒரு பல்கலைக்கழகமே நடத்தலாம்! கேட்பார் யாரும் இல்லை! மிடில் கிளாஸ் மக்களுக்கு டிகிரி தான் சொத்து என்று அசையா நம்பிக்கை! என்ன செய்ய?

  2. ThanjaiTamila says:

    நீதி மன்றம் விசித்திரமான பல ஊழல் வழக்குகளை சந்தித்து இருக்கிறது!!!!
    புதுமையான ஊழல் செய்த பல மனிதர்களை கண்டிருக்கிறது.!!!

    அனால் இந்த ஊழல் வழக்கு ஒன்றும் விசித்திரமானதும் அல்ல ஊழலளுக்கு நான் ஒன்றும் புதுமையனவனும் அல்ல…

    ஈழதமிழர்கள் செத்துமடிவதை கண்டுகொள்ளவில்லை நான்..
    ராஜாவை மந்திரியாக்கி அலைகற்றை விற்பதில் ஊழல் செய்தேன்
    மக்களுக்கு இலவசங்கள் கொடுத்து சோம்பேறி ஆக்கின்னேன்
    குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறேன் இப்படி எல்லாம்…

    நீங்கள் நினைப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று இல்லை நிச்சயமாக இல்லை.

    ஈழதமிழர்கள் செத்துமடிவதை கண்டுகொள்ளவில்லை நான் ஈழத்தமிழர்களே கூடாது என்பதற்காகவா இல்லை அன்னை சோனியா மனம் புண் படுமே என்று.

    மக்களுக்கு இலவசங்கள் கொடுத்து சோம்பேறி ஆக்கின்னேன், மக்கள் வேலை செய்ய கூடாது என்பதற்காகவா இல்லை அடுத்த தேர்தலிலும் இதை சொல்லி ஓட்டு கேட்கவேண்டும் என்பதற்காக .

    உனக்கேன் இவ்வளவு அக்கறை ..பாதிக்கப்பட்டேன் நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன் ஜெயலலிதா அம்மையாரால் …

    சுயநலம் என்பீர்கள் ஆம் இன்னொருமுறை என்னால் ஐயோ என்னை கொல்றாங்கோ என கத்தி கூப்பாடு போடமுடியாது…

    என்னை குற்றவாளி என்கிறார்களே இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் நான் திமுக தலைவராக செய்த தில்லுமுல்லுகள் தெரியும். ரயில் வராது என்று தெரிந்து தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து மறியல் செய்தேன். நெடுஞ்செழியனை பின்னுக்கு திமுக தலைவரானேன்…

    தீர்ப்பு எழுதுமுன் கேளுங்கள் என கதையை தமிழ்நாட்டிலே திருவாருரிலே பிறந்தவன் நான் பிறந்தது ஓரிடம் திருட்டு ரயில் ஏறி வந்தது ஒரு ஓரிடம்
    … சென்னை என் உயிரை வளர்த்தது என்னை திமுக தலைவராக்கியது …

    மோசடி வழக்கில் சிக்கி நிற்கிறாளே இந்த ஜாலக்காரி “நீரா ராடியா” இவள் மோசடி வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன் …
    என் மகள் கனிமொழியை கண்டேன் திகார் சிறையிலே…

    மகளின் பெயரோ கனிமொழி, மங்களமான பெயர், ஆனால் பேசவில்லை என்னிடம் அவள் ஒருமொழி… ஊழல் செய்த குடும்பம் சிக்கவைக்கப்பட்டது.
    கண்ணிலே நீர் கனிமொழி அழுதால் அவங்க அம்மா ராஜாத்தி அம்மளுக்காக நான் அழுதேன் …. செழித்து ஊழல் செய்த குடும்பம் சீரழிந்துவிட்டது இன்று …

    கோர்ட்டிலே பெயில், திகாரிலே ஜெயில் கனிமொழி அலைந்தால் அவளுக்காக ராம் ஜெத்மளானியிடம் நான் அலைந்தேன் ..
    இந்தியாவில் ஊழல் செய்த ஒரு தமிழனுக்கு வாழ வழியில்லை……
    ஊழல் வழக்கில் சிக்கிய என மகளுக்கு பிணை வழங்கவில்லை…
    என மகள் நினைத்திருந்தால் அடித்த பணத்தில் மலேசியாவிலோ அல்லது சுவிட்சர்லாந்தின் ஒரு மூலையிலோ ஓடி மறைந்து இருக்கலாம்.. அப்படி செய்தாளா என மகள் கனிமொழி ……!!!!
    அதைத்தான் இந்த நாடும் நாடு மக்களும் விரும்புகிறார்களா!!!
    சுப்ரீம் கோர்ட் என மகளை விரட்டியது.. ஊழல் வழக்குகள் என மகளை விரட்டியது ….நீதிமன்றம் என மகளுக்கு பிணை வழங்காமல் விரட்டியது … ஓடினாள் …ஓடினாள் … டெல்லி நகரில் சோனியா காந்தி வீடு, மன்மோகன் வீடு வரை ஓடினாள் அவர்கள் வெளிநாடு சுற்றுபயணம் போய்விட்டதால் திரும்பி திகார் சிறைக்கே வந்துவிட்டாள்…

    அந்த ஓட்டத்தை தடுத்து இருக்கவேண்டும் என மகள் வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும்.. இன்று இந்த சட்டத்தை நீட்டுவோர் …செய்தார்களா ஊழல் செய்ய விட்டார்களா கனிமொழியை ….
    கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வாங்கியது ஒரு குற்றம், ராஜாவோடு சேர்த்து கூட்டு கொள்ளை அடித்தது ஒரு குற்றம் …
    இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார் யார் …..

    திருவாருரிலிருந்து திருட்டு ரயில் ஏறி வரும்போது என்னை பிடிக்காத செக்கரின் குற்றமா???
    இல்லை….. என்னை ஒட்டு போட்டு ஆட்சியில் உட்கார வாய்த்த மக்களின் குற்றமா???
    ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தது யார் குற்றம் … ஸ்பெக்ட்ரம் துறையை எங்களுக்கு ஒதுக்கிய மன்மோகன் குற்றமா இல்லை இந்த துறைதான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிய என் குற்றமா!!!
    இந்த குற்றங்கள் களையபோவது வரை கருணாநிதிகளும் கனிமொழிகளும் குறையபோவதில்லை….

    மக்கள் என்றும் உறங்கிக்கொண்டே இருப்பதில்லை கலைஞர் அவர்களே உங்கள் குடும்பத்திற்காக இவ்வளவு சிந்திக்கும், வருத்தப்படும் நீங்கள் ஓட்டு போட்ட மக்களுக்காக கொஞ்சம் சிந்தித்து இருந்தால்.. நீங்கள் ஒய்வு எடுக்கவேண்டிய அவசியம் இருந்து இருக்காது..!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: